அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
கோசைநகர் (கோயம்பேடு)
699. ஆதவித பாரமுலை
ராகம் -
தாளம் -
தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன - தனதான
பாடல்
ஆதவித பாரமுலை மாதரிடை நூல்வயிற
தாலிலையெ னாமதன - கலைலீலை

யாவும்விளை வானகுழி யானதிரி கோணமதி
லாசைமிக வாயடிய - னலையாமல்

நாதசத கோடிமறை யோலமிடு நூபுரமு
னானபத மாமலரை - நலமாக

நானநுதி னாதினமு மேநினைய வேகிருபை
நாடியரு ளேயருள - வருவாயே

சீதமதி யாடரவு வேரறுகு மாஇறகு
சீதசல மாசடில - பரமேசர்

சீர்மைபெற வேயுதவு கூர்மைதரு வேலசிவ
சீறிவரு மாவசுரர் - குலகாலா

கோதைகுற மாதுகுண தேவமட மாதுமிரு
பாலுமுற வீறிவரு - குமரேசா

கோசைநகர் வாழவரு மீசடியர் நேசசரு
வேசமுரு காவமரர் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 1

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com